For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர்: பாமக பிரமுகர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்... பறக்கும் படை அதிரடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பாமக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சத்து 63 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

வேலூர் அடுத்த அணைக்கட்டு ஊனை பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. பாமக ஒன்றிய அவைத் தலைவராக உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பதற்காக பணம் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரெஜினாவுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், விரைந்து சென்ற அதிகாரிகள் குப்புசாமியின் வீட்டை சோதனையிட்டனர்.

அங்கு பூஜை அறையில் இருந்த 2 அட்டைப் பெட்டிகளை சோதனையிட்டபோது, அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னுவிடம் ஒப்படைத் தனர்.

1000, 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ.50 லட்சத்து 63 ஆயிரம் இருந்தது. வீட்டில் எதற்காக இவ்வளவு பணம் வைக்கப்பட்டது என்பது குறித்து சரியான விளக்கம் அளிக் காததால் வருமானவரித் துறை அதிகாரிகளிடம் இந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

குப்பு சாமியிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், பணம் பறி முதல் செய்யப்பட்டதை அடுத்து வேலூர் பாஜக வேட்பா ளர் ஏ.சி.சண்முகத்தின் ஆதர வாளர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பணத் துக்கான கணக்குகள் தங்களிடம் இருக்கிறது என தெரிவித்தனர்.

ஆதாரங்கள் இருந்தால் அதனை வருமானவரித் துறையி டம் காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுங்கள் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டினை விலைக்கு வாங்குவதாக திராவிடக் கட்சிகள் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி வந்தார் இந்த நிலையில் பாமக பிரமுகர் வீட்டிலேயே பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A flying squad attached to Anaicut Assembly segment in the Vellore Lok Sabha constituency on Tuesday seized 63 lakh in cash from the house of a PMK functionary in Oonai Pallathur village. This is the largest single seizure since the model code of conduct came into effect in the district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X