
வெள்ளம் பாதித்த சென்னைக்கு வேகமாக வந்து உதவிய ஆர்எஸ்எஸ்
சென்னை: மத மாச்சரியம் இல்லாமல் பல்வேறு மதத்தினரும் இணைந்து ஒரு இயக்கமாக மாறி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றியுள்ளனர். அந்த வகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் அளப்பறிய பணியாற்றியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்லாமல் சேவா பாரதி, விஸ்வா சம்வாத் கேந்த்ரா உள்ளிட்ட பல்வேரு அமைப்புகள் இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் சேவையாற்றியுள்ளன.
குரோம்பேட்டையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மாடியில் தங்கியிருந்த சிலர் வீடுகளை விட்டு வெளியே வர மறுத்தபோது அவர்களிடம் சென்று பயத்தைப் போக்கும் வகையில் பேசி அவர்களை அங்கருந்து வெளியேறுவதற்கு உதவியுள்ளனர்.
Day-4
RSS Swayamsevaks at #ChennaiRains relief works,
Local MLA says ‘THANK YOU RSS’
https://t.co/jsB7qy76m6 pic.twitter.com/mPntvn31p7
— Rajesh Padmar (@rajeshpadmar) December 4, 2015
பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் தருவது, உணவு ஏற்பாடு செய்வது, மருந்து அனுப்பி வைப்பது என பல பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ரூ.2 லட்சத்திலான நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
#RSS workers out in full force in #Chennai. Helping people, distributing food packets, water. @RSSorg #ChennaiRains pic.twitter.com/Ni3t2oLMYx
— भाजपा सम्वाद (@bjpsamvad) December 4, 2015
இந்து முன்னனி திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சுப்பிரமணியம், பாஜக வடக்கு மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், ஆர்எஸ்எஸ் சூலூர் ஒன்றியச் செயலாளர் மாயாண்டி ஆகியோர் தலைமையில் இப்பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், மூன்று நாள்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தனர்.
இதேபோல வெள்ளக்கோவிலில் இருந்து ஆர்எஸ்எஸ் சார்பில் நிவாரணப் பொருள்கள் சென்னைக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டன. வெள்ளக்கோவில் வட்டார ஆர்எஸ்எஸ் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி நாராயணசாமி தலைமையில் தன்னார்வலர்கள், ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான சேவா பாரதி அமைப்பினர் நிவாரணப் பொருள்களை சேகரித்தனர்.
Day-3
Updates of Second Phsase of relief activities by RSS Swayamsevaks at #ChennaiRains .
https://t.co/G9XcAgYqfn pic.twitter.com/BZFjhHi0Pp
— Rajesh Padmar (@rajeshpadmar) December 3, 2015
அரிசி, பிஸ்கட், குடிநீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வாகனம் மூலமாக சென்னைக்கு அனுப்பப்பட்டன. நிவாரண நிதியாக ரூ. 85,000 ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் தெரிவித்தனர்.
சென்னையைப் போலவே காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினர் பெருமளவில் உதவிகள் புரிந்துள்ளனர்.