கட்சி நிர்வாகிகளிடம் பக்குவமாக நடக்கணும் - தினகரனுக்கு சசிகலா அட்வைஸ் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரோல் முடிந்து பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திரும்பும் சசிகலா சில உத்தரவுகளை தினகரனுக்கு போட்டிருக்கிறாராம். கட்சி நிர்வாகிகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த 6ஆம் தேதி பரோலில் வெளியே வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவரை சென்று பார்த்த வந்த சசிகலாவிற்கு பரோல் காலம் முடிந்து விட்டது. மீண்டும் சிறைக்குச் செல்கிறார்.

Saisikala order Dinakaran in political issues

இந்நிலையில், நேற்று இரவு இளவரசி மகன் விவேக், கிருஷ்ணபிரியா மற்றும் தினகரன் உள்ளிட்ட குடும்ப உறவுகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தங்கள் பக்கம் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளக் கூடாது என்றும் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், எடப்பாடி அரசை கவிழ்ப்பதற்கான எந்த முடிவுகளையும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ எடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். கட்சி சார்பில் தமிழக மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala strictly said Dinakaran to be lenient with party leaders and cadres and Sasikala returning Bangaluru prison today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற