தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்- சங்கர மடம் விளக்கம்
தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video

காஞ்சிபுரம்: சென்னையில் நடைபெற்ற நூல் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காகது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அச்சமயம் அவர் தியானத்தில் இருந்ததாக சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது.
பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார்.
விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

விஜயேந்திரர்
ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து...
மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து எழுந்திருக்காமல் அவர் தேசிய கீதம் பாடப்பட்டபோது எழுந்து நின்றதாக கூறப்படுகிறது. இதற்கும் எதிர்ப்பு வலுத்தது. மேலும் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

முற்றுப்புள்ளி
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்து சங்கர மடம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து சங்கர மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் தாய் பாடிய போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்.

நடைமுறையே தமிழ்த்தாய் வாழ்த்துக்கும்
பொதுவாக கடவுள் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நின்றாலும் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் உட்கார்ந்து கொண்டே தியானத்தில் இருப்பது வழக்கம். அதுபோல் தமிழ்த் தாய் வாழ்த்தின்போதும் கடவுள் வாழ்த்துக்கான நடைமுறையை விஜயேந்திரர் பின்பற்றியுள்ளதாக சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications