அரசியல் ஆதாயத்திற்கு ஜெ.மரணத்தை பயன்படுத்தினார் ஓபிஎஸ்? சரவணன் எம்எல்ஏ பரபர!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தியதாக சரவணன் எம்.எல்.ஏ. பேசியுள்ளதாக டைம்ஸ் நவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்களுக்கு சசிகலா தரப்பு கோடிக் கணக்கில் பேரம் பேசியது தொடர்பாக மதுரை எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோக்கள் டைம்ஸ் நவ் என்ற ஆங்கில செய்தி சேனலும் மூன் டிவியும் இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அம்பலமாகியுள்ளது.

Saravanan mla says O Panneerselvam’s Jaya murder charge was politically motivated

இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியுள்ளதாக வீடியோ ஒன்றை இன்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாக டைம்ஸ் நவ் தரப்பில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உண்மைதான். ஓ.பன்னீர்செல்வத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போதே ஜெயலலிதா மரணம் தொடர்பாக மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் ஆரம்பத்தில் மர்மம் எதுவும் இல்லை எனக் கூறிய அவர் பின்னர் இவ்வாறு கூறினார். ஜெயலலிதாவுடன் இருந்துவிட்டு பன்னீர்செல்வம் திடீரென சந்தேகம் கிளப்பியுள்ளதாக சரவணன் கூறியதாக டைம்ஸ் நவ் தனது டுவிட்டுகளில் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் நவ் வீடியோ வெளியானது குறித்து சரவணன் இன்று மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MLA SS Saravanan says O Panneerselvam’s former chief minister Jayalalithaa's murder charge was politically motivated to win a few votes in RK Nagar poll
Please Wait while comments are loading...