நடராஜன் உடலில் என்ன பிரச்சினை?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சசியின் கணவர் நடராஜன் உடலில் என்ன பிரச்சினை?-வீடியோ

சென்னை: உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களாகவே கல்லீரலில் பிரச்சினை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

நடராஜனுக்கு சிகிச்சை

நடராஜனுக்கு சிகிச்சை

தற்போது மீண்டும் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆறு மாதமாக சிகிச்சை

ஆறு மாதமாக சிகிச்சை

இதுகுறித்து குளோபல் மருத்துவமனை செய்திக்குறிப்பு கூறுகையில், கடந்த ஆறு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார் நடராஜன். அவருக்கு கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரகமும் பாதிப்பு

சிறுநீரகமும் பாதிப்பு

அதேபோல சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் அடைப்பும் அவருக்கு உள்ளது. அவருக்கு தொடர்ந்து டயாலிசிஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிக் குழு

தனிக் குழு

நடராஜனுக்கு டாக்டர் முகம்மது ரீலா தலைமையிலான டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று மட்டும் நடராஜனுக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக டயாலிசிஸ் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala's husband Natarajan is getting treament for muliple organ failure in Global hospital. He is receiving treatment from for the last six months.
Please Wait while comments are loading...