For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கட்டம்" சரியா இருக்காம்.. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தயாராகும் சசிகலா!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் சசிகலா போட்டியிட்டு தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக போயஸ் தோட்டத்து வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாதக கட்டங்களில் கிரகங்களின் சேர்க்கை சரியாக அமைந்து சசிக்கு சாதகமாக இருப்பதால், வரும் சட்டசபை தேர்தலில், அவர் போட்டியிட்டால், வெற்றி நிச்சயம் என, ஜோதிடர் கூறியுள்ளனராம்.

இதனால் குஷியான சசிகலாவின் உறவினர்கள் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர், திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளில் எது மிகவும் சாதகமாக இருக்கும் என கணிக்கும் பணியில், களம் இறங்கி உள்ளனராம்.

அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து ஒதுங்கியிருக்கும் டி.டி.வி.தினகரனை கட்சி பதவிக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். சசியின் இந்த முயற்சிக்கு எதிராக தினகரன் குறித்து தவறான விவரங்களை ஓ.பன்னீர் செல்வமும், வைத்திலிங்கமும், ஜெயலலிதாவிடம் போட்டு கொடுப்பதாகவும் இதனால் தினகரனின் அரசியல் என்ட்ரி லேட்டாவதாகவும் கவலைப்படுகின்றனர் தினகரனின் ஆதரவாளர்கள்.

யார் இந்த தினகரன்

யார் இந்த தினகரன்

டி.டி.வி. என அ.தி.மு.க-வினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தினகரன். சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன். சசிகலா மூலமாக கார்டனுக்குள் நுழைந்து, ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக வலம் வந்தார். தேர்தல் சுற்றுப்பயணக் காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாவல் பணிகளை மும்முரமாகக் கவனித்துக் கொள்வதற்காக தோட்டத்துக்குள் அழைத்து வரப்பட்டார். பிறந்த ஊரான திருத்துறைப்பூண்டியையும் அப்பா விவேகானந்தன் பெயரையும் இணைத்து, டி.டி.வி.தினகரன் என மாறினார்.

மக்கள் செல்வன் பட்டம்

மக்கள் செல்வன் பட்டம்

மாமன் மகள் அனுராதாவை, ஜெயலலிதாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். 1999ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் யார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க... தினகரனைக் களமிறக்கினார் ஜெயலலிதா. தேனி மாவட்டக் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது, தென்மாவட்ட நிர்வாகிகள் பலரும் இவருக்காக ஓடியாடி வேலை செய்து அமோக வெற்றியைத் தேடித் தந்தனர்.

ஒ.பி.எஸ் அறிமுகம்

ஒ.பி.எஸ் அறிமுகம்

கட்சியில் மாநிலப் பொருளாளர் பதவி தேடி வந்தது. பெரியகுளம் எம்.பி-யாக இருந்த போது, தனது தொகுதி மக்களுக்கு கேட்டதை எல்லாம் செய்து கொடுக்க, தேனி மாவட்டத்தினர், 'மக்கள் செல்வன்' பட்டத்தைச் சூட்டினார்கள். லோக்சபா வேட்பாளராக பெரியகுளத்தில் தினகரன் காலடி வைத்தபோது, கட்சியில் சீனியரான ஓ.பன்னீர் செல்வத்தின் அடக்கத்தில் ஐக்கியமான தினகரன், தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார். இதுவே ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் நாற்காலி வரை கொண்டு சென்றது.

அதிமுகவில் அதிகார மையம்

அதிமுகவில் அதிகார மையம்

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அறிவிக்கப்படாத அதிகார மையமாக தினகரன் மாறினார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதி களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றவே தினகரனும் தோல்வியைத் தழுவினார். அதுமுதல் டிடிவியின் இறங்குமுகம் ஆரம்பமானது.

தீவிர அரசியலில் சசிகலா

தீவிர அரசியலில் சசிகலா

சசிகலாவின் உறவினர்களில் தினகரன் தவிர டாக்டர் வெங்கடேஷ், கட்சியின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில செயலராக இருந்து செயல்பட்டார். மகாதேவனுக்கும் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், கட்சியில் உறுப்பினராக மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்ட சசிகலா, கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஜெயலலிதாவோடு கலந்து கொண்டாலும், தீவிர அரசியலில் இதுவரை நேரடியாக ஈடுபட்டதில்லை.

சட்டசபை தேர்தலில் போட்டி

சட்டசபை தேர்தலில் போட்டி

இந்நிலையில், அவரை தீவிர அரசியலுக்கு வர சொல்லி, அவரது உறவினர்கள் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. கூடவே, அவரை தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வைக்கவும், உறவினர்கள் தீவிராகி உள்ளதாக தகவல் பரவி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தோழியுடன் இருந்த பிணக்குகளை சரி செய்து விட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையானதை அடுத்து சட்டசபை தேர்தலில் களம் காண தயாராகிவிட்டாராம்.

ஐவர் அணி

ஐவர் அணி

போயஸ் கார்டனில் தனக்கு போட்டியாக வந்த இளவரசியை ஓரளவு சமாளித்து விட்டார் சசிகலா என்றே பேசப்படுகிறது. அதே நேரத்தில் கட்சியில் உள்ள ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், ஆகியோரை அடக்கி தங்கள் கை ஓங்க வேண்டுமெனில், தினகரனையோ அல்லது தானோ ( சசிகலா) நேரடியாக அரசியலில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.வாக தேர்தல் களத்தில் நிற்பது என முடிவு செய்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

ஜோதிடரிடம் ஆலோசனை

ஜோதிடரிடம் ஆலோசனை

தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது சசிகலாவின் நீண்ட கால கனவு. இதை சில நேரங்களில், கட்சி யின் பொது செயலர் ஜெயலலிதாவிடமே அவர் வலியுறுத்தியதுண்டு. 'நேரம் வரும் போது எல்லாமே, தானாக நடக்கும் என, ஜெயலலிதா சொல்லி வந்தார். இந்நிலையில், போயஸ் தோட்டத்துக்கு நெருக்கமான ஜோதிடர் ஒருவரிடம், சசிகலாவின் உறவு வட்டத்தில் இருக்கும் சிலர், அவரின் ஜாதகத்தை கொடுத்து, பலன் கேட்டுள்ளனர்.

சாதகமான தொகுதி எது?

சாதகமான தொகுதி எது?

சசிகலா, தேர்தலில் போட்டியிட வேண்டிய காலம் வந்துவிட்டது. ஜாதகப்பலன்கள் அவருக்கு சாதகமாக இருப்பதால், வரும் சட்டசபை தேர்தலில், அவர் போட்டியிட்டால், வெற்றி நிச்சயம் என, ஜோதிடர் கூறியுள்ளார். இதனால் ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர், திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளில் எது மிகவும் சாதகமாக இருக்கும் என கணிக்கும் பணியில், சசிகலா உறவினர்கள் களம் இறங்கி உள்ளனர்.

மன்னார்குடிக்கு குறி

மன்னார்குடிக்கு குறி

அதே நேரத்தில் சசிகலாவை மன்னார்குடி அல்லது திருப்போரூரில் போட்டியிட வைப்பது என ரகசியமாக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த்தை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர். இதற்காக ஜெய் ஆனந்த் திருப்போரூர் தொகுதியில் வெள்ள நிவாரண முகாம் ஒன்றையும் நடத்தியிருக்கிறாராம். எது எப்படியே கடந்த சட்டசபை தேர்தலைப் போல இம்முறையும் வேட்பாளர் தேர்வில் மன்னார்குடி குடும்பத்தினர் கை ஓங்கியிருக்கிறது என்றே கூறப்படுகிறது. அவர்கள் காட்டும் ஆட்களுக்கே சீட் கிடைக்கும் என்பதால் கோவிலை சுற்றிய கையோடு மன்னார்குடி குடும்பத்தினரின் வீடுகளை சுற்றத் தொடங்கியுள்ளனராம்.

English summary
ADMK leader Jayalalitha's close aide Sasikala is ready to enter into poll fray in this assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X