சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை.. அம்பலப்படுத்திய தேர்தல் ஆணையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அஸ்பயர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குத் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், பொதுச்செயலாளர் நியமனத்தில் சர்ச்சை இருப்பதால் சசிகலாவின் நியமனத்தை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Sasikala yet recognize as GS, says EC

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொதுக் குழுவால் நியமிக்கப்பட்டார். அதனை எதிர்த்து ராஜ்ய சபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து, சசிகலா அணியில் இருந்து பிரிந்த பின்னர், ஓபிஎஸ் அணியினரும் இதே புகாரை தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருந்தனர்.

இது குறித்து விளக்கம் அளிக்க சசிகலாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதன் பேரில் சசிகலா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கமளித்தார். அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பு அளித்துள்ள மனுக்கள் தேர்தல் ஆணையத்தில் பரிசீலனையில் உள்ளன.

இந்நிலையில், சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது தொடர்பாக அஸ்பயர் சுவாமிநாதன் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், சசிகலாவை பொதுச் செயலாளராக இன்னும் அங்கீகரிக்கவில்லை எனக் கூறியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala is not yet recognized as ADMK General Secretary, said Election Commission.
Please Wait while comments are loading...