For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து முன்னணியின் சர்ச் தாக்குதல், பஸ்கள் மீது கல்வீச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ் குமாரின் உடல் ஊர்வலத்தின்போது சர்ச் மீது தாக்குதல் நடத்தியது, பஸ்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்தியது, கிறிஸ்தவ போதகரின் காரைத் தாக்கிய செயலுக்கு எஸ்.டி.பி-.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்த கொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த கொலை தொடர்பாக விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே காவல்துறை இந்த கொலைத் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்துவிட்டு, குமாரின் உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்ற இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜகவினர் மிக மோசமாக மத விரோதத்தை தூண்டும் விதத்தில் கோஷங்களை எழுப்பியும், திறந்த மற்றும் பூட்டியிருந்த கடைகள் மீது தாக்குதலை நடத்தியும் சென்றுள்ளனர். மேலும் பேருந்துகள், வாகனங்களை அடித்து நொறுக்கியவாறும் சென்றுள்ளனர்.

இதுமட்டுமின்றி சென்னை அமைந்தகரையில் உள்ள தேவாலயம் ஒன்றை தாக்கியதோடு, தேவாலயத்தின் போதகர், அவரது வாகனம் மற்றும் அங்குள்ள சகோதரிகளையும் வன்முறை கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். காவல்துறை கடுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இந்த வன்முறைக்கு காரணம்.

நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி அமைதியான முறையில் சாலை மறியல் செய்த பெண்கள் மீது, கொடூரமாக தடியடி நடத்தியும், இளைஞர்களை கைது செய்தும் மிக மோசமாக நடந்துகொண்ட காவல்துறை, சென்னையின் முக்கிய வீதிகளில் இப்படியொரு வன்முறையை எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை.

காவல்துறை கடுமையாக செயல்பட்டு வன்முறையை தடுத்திருக்க வேண்டும். ஆகவே இனிமேலும் இதுபோன்ற வன்முறைகள் நிகழாமலிருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
SDPI party has condemned the attack on church by Hindu activists in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X