For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமரி மாவட்டத்தில் கடும் கடல் சீற்றம்.. 4 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் கட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    குமரி மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து வீட்டை விழுங்கி இழுத்து சென்ற கடல்.. பகீர் காட்சிகள்

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. 4 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்துள்ளதால் மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கிறார்கள்.

    தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நேற்று காலை புயல் சின்னமாக மாறியது. இந்த புயலுக்கு 'ஒகி' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த புயல் காற்று மற்றும் மழை, தென் மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

    தகவல் தொடர்பு

    தகவல் தொடர்பு

    நாகர்கோவில் நேற்று காலையில் இருந்தே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் செல்போன் டவர்கள் சேதம் அடைந்ததால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    கடலில் சீற்றம்

    கடலில் சீற்றம்

    கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கவுமே கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சில இடங்களில் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழும்பியதாக கூறப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மின்சார வசதி இல்லை

    மின்சார வசதி இல்லை

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் மின் கம்பிகள் விழுந்தன. மரங்கள் முறிந்தன. இதனால் மின்சார வசதி முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    வீட்டை விழுங்கும் கடல்

    இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து ஒரு வீட்டை அப்படியே விழுங்கும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் நெட்டிசன் ஷேர் செய்துள்ள இந்த வீடியோவை பாருங்கள். எந்த அளவுக்கு புயலின் பயங்கர தாக்கம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    English summary
    Sea water enter village in Kanyakumari district, and took away a house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X