எனக்கு ரஜினிதான் பிடிக்கும்...கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு கருத்து சொல்வேன்.. செல்லூரார் அடடே ரிப்ளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை... செல்லூர் ராஜூ- வீடியோ

  மதுரை: எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக எனக்கு ரஜினிதான் பிடிக்கும், நான் அவரது ரசிகன். அவர் கட்சி அறிவித்து அதற்கான கொள்கைகளை தெரிவிக்கட்டும் பிறகு கருத்து செல்வேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  ரஜினிகாந்த் நேற்று முதல் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது அவர் கூறுகையில் வரும் 31-ஆம் தேதி எனது அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து கூறுவேன் என்றார்.

  Sellur Raju says that he is also Rajini fan

  இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரஜினியின் ரசிகன். அவர் கட்சியை அறிவிக்கட்டும். அதற்கான கொள்கைகளை தெரிவித்த பிறகு நான் கருத்து கூறுகிறேன்.

  தற்போதுள்ள நடிகர்கள் நேரடியாக முதல்வாராக துடிக்கிறார்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக் கொள்கிறேன்.

  டிடிவி தினகரன் ஆர்கே நகரில் பணம் கொடுத்து வெற்றி பெற்றாரா என்பதை என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது, தேர்தல் ஆணையத்திடம் கேளுங்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister Sellur Raju says that he is also Rajini's fan, he will comment after Rajini starts the party and announes his party's policies.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X