For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் மத்திய அரசு அதிகாரி மகனுடன் தற்கொலை!

Google Oneindia Tamil News

சென்னை: ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்த கம்பெனிகள் விவகாரத்துறை முன்னாள் இயக்குனர் ஜெனரல் பன்சால் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய அரசின் கம்பனிகள் விவகார இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர் பால் கிஷன் பன்சால் ஐஏஎஸ். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்ள 9 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பணம் கைமாறிய போது கையும் களவுமாக பிடிப்பட்டார்.

Senior bureaucrat BK Bansal commits suicide along with son

இதனையடுத்து, கடந்த ஜுலை 19ம் தேதி, அவமானம் தாங்க முடியாத இவரது மனைவி சத்யபாலாவும் மகள் நேகாவும் தனித்தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில், ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்றிருந்த பால் கிஷன் பன்சால், தனது மகன் யோகேஷ் பன்சாலுடன் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இன்று காலை இவர்களது மரணம் குறித்த தகவலை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தகவலறிந்த போலீசார் பன்சாலின் வீட்டிற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

English summary
Senior bureaucrat Bal Kishan Bansal, committed suicide along with his son Yogesh Bansal in his residence in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X