‘வாழை’ படம் போல இன்று காலையில் நடந்த கோர சம்பவம்.. சரக்கு ஆட்டோவில் சென்ற கூலித் தொழிலாளர்கள் பலி!
தென்காசி: அண்மையில் வெளியான மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படம், படம் பார்த்தவர்களை உலுக்கிய நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் இன்று தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ளது. விவசாய தொழிலாளர்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது அந்த வாகனம் கவிழ்ந்ததில் பெண்கள் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இன்று காலையில் ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழந்தனர். சுமார் 20 விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ஆட்டோ, சுரண்டை - வாடியூர் சாலையில் விபத்தில் சிக்கியது. வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததில் ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60) ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த 17 பேர் சிகிச்சைக்காக தென்காசி, ஆலங்குளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான 'வாழை' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, ரசிகர்களை கலங்க வைத்து, கண்களை குளமாக்கி அனுப்புகிறது. உண்மைச் சம்பவங்களை களமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
கடந்த 2001 ஆம் ஆண்டு, நெல்லை பகுதியில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் 19 பேர் பலியான நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாரி செல்வராஜ் 'வாழை' படத்தை இயக்கியுள்ளார். வாழை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் அனைவரையும் உலுக்கிய நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இன்று தென்காசியில் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விவசாயப் பணிகளுக்காக சரக்கு ஆட்டோவில் சுமார் 20 கூலித் தொழிலாளிகள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஆட்டோ சாலைக்கு கீழே பள்ளத்தில் கவிழ்ந்து 3 பேர் பலியாகி உள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications