For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைனில் சூடுபிடித்தது சிவகாசி பட்டாசு விற்பனை- ரூ.100 கோடியைத் தாண்டியதாம்!

Google Oneindia Tamil News

சிவகாசி: தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் ஆன் லைன் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு ரூபாய் 100 கோடியை தாண்டியுள்ளது.

வருகிற நவம்பர் மாதம் 10 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பட்டாசு தொழிலுக்கு புகழ் பெற்ற சிவகாசியில் தற்போது பட்டாசு விற்பனை தீவிரமடைந்துள்ளது.

தீபாவளிக்காக புதுப்புது ரகங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமானோர் கார்களிலும், பைக்குகளிலும், லாரிகளிலும் வருவதால் சிவகாசியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது.

ஆன்லைன் மூலமாக விற்பனை:

ஆன்லைன் மூலமாக விற்பனை:

இங்கு மொத்த மற்றும் சில்லறை விற்பனையைத் தவிர கடந்த 3 ஆண்டுகளாக "ஆன் லைன்" மூலமாகவும் பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. பிரபல பட்டாசு நிறுவனங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்களும் ஆன் லைனில் பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால் கடந்த 2 ஆண்டுகளைவிட சிவகாசியில் இந்த ஆண்டு ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.

சிறிய நிறுவனங்களும் விற்பனை:

சிறிய நிறுவனங்களும் விற்பனை:

கடந்த 2 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு ஆன் லைன் மூலமாக பட்டாசு விற்பனை அதிகரித்து உள்ளது. பிரபல நிறுவனங்களுக்கு ஈடாக ஏராளமான சிறிய நிறுவனங்களும் ஆன் லைன் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

பட்டாசு வாங்கும் பழக்கம்:

பட்டாசு வாங்கும் பழக்கம்:

இதனால் இந்த ஆண்டு ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை ரூபாய் 100 கோடியை தாண்டியுள்ளது. ஆன் லைன் மூலம் பட்டாசு வாங்கும் பழக்கம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாகும்.

50 சதவீதம் தள்ளுபடி:

50 சதவீதம் தள்ளுபடி:

பிரபல நிறுவனங்கள் தரமான பட்டாசுகளை விற்பனை செய்கின்றன. ஆனால் வண்ணமயமான விளம்பரங்களுடன் சில போலி பட்டாசு நிறுவனங்களும் ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. பலவிதமான பட்டாசு ரகங்களை வெப்சைட்டில் வெளியிட்டு அதற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி கொடுப்பதாகவும் விளம்பரம் செய்கின்றன என்பதையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Sivakasi crackers online shopping goes on fire sale due to Diwali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X