கப்பல் மூலம் கள்ளநோட்டு கடத்தல்? சென்னை துறைமுகத்தில் 4-வது நாளாக சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கப்பல் மூலம் கண்டெய்னர்களில் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சென்னை துறைமுகத்தில் 4வது நாளாக இன்றும் சோதனை நடத்தப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் கப்பல் மூலம் கண்டெய்னர்களில் கள்ளநோட்டு கடத்தல் நடைபெறுவதாக கடந்த சனிக்கிழமை மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அங்கு தீவிர சோதனை மேற்கோள்ளப்பட்டது.

Smuggling of fake currency,4th day of the test is conducted today in Chennai port

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வளைகுடா, பாகிஸ்தான், பங்களாதேஷில் இருந்து வரும் கப்பல்களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் 4-வது நாளாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் துறைமுகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
4th day of the test is conducted today in Chennai port. On the information of the smuggling of counterfeit money in containers by ship to Chennai port.
Please Wait while comments are loading...