துள்ளி வரும் காளை... இளம் தமிழனின் யுகப்புரட்சி - ஜல்லிக்கட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

  ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி விழா...!..பாடல்- வீடியோ

  சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சி பற்றிய பாடலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர் ஜீடா பைட் ஸ்டூடியோவினர்.

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. வாடிவாசல் திறப்பதற்காக கடந்த ஆண்டு தை மாதம் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் விளைவாக மாபெரும் வெற்றி பெற்றனர் இளைஞர்கள்.

   Song on Jallikkatu goes viral

  ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றப்பட்டது. வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வந்தன. இந்த போராட்டத்தை நினைவூட்டும் வகையில் ஒரு பாடலை யூ டுயூப் சேனலில் பதிவிட்டுள்ளனர் இளைஞர்கள்.

  உரசாதே... முறைக்காதே... வீரத் தமிழன் நாங்கடா
  ஜல்லிக்கட்டு தடையை எல்லாம் வென்றெடுத்த வீரன்டா

  என்று தொடங்கும் பாடல், ஜல்லிக்கட்டு போட்டியை உற்சாகப்படுத்த வருகிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வீரத்தமிழர்களின் விளையாட்டு இது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை பெருமையை சொல்கிறது இந்த பாடல்.

  சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு புரட்சியைப் பற்றி அழகாக படமாக்கப்பட்டுள்ளது. அந்நிய பொருட்களை ஒதுக்குவோம் என சுதேசி பற்றியும் பேசுகிறது இந்த பாடல்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A dedicated song on Jallikkattu has been released by Zetabyte Team on the eve of Pongal festival and it has gone viral in You Tube.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற