For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா அட்டென்டென்ஸ்.. ராகுலை விட "அம்மா"தான் பெஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: மகன் ராகுல் காந்தியை விட தாயார் சோனியா காந்தி முழுமையானவராக இருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை சோனியா நிரூபித்துள்ளார். லோக்சபா கூட்டங்களுக்கு வருவதில் ராகுலை விட சோனியாவே முன்னிலையில் இருக்கிறார்.

சோனியா காந்தியின் வருகைப் பதிவு 59 சதவீதமாக உள்ளது. அதேசமயம், ராகுல் காந்தியின் வருகைப் பதிவு 54 சதவீதம்தான்.

மொத்தம் உள்ள 545 உறுப்பினர்களில் 5 எம்.பிக்கள் மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் 100 சதவீத வருகைப் பதிவை வைத்திருந்தனர்.

உ.பி. எம்.பி. பைரான் பிரசாத் மிஸ்ரா

உ.பி. எம்.பி. பைரான் பிரசாத் மிஸ்ரா

உ.பியைச் சேர்ந்த எம்.பி. பைரான் பிரசாத் மிஸ்ரா என்பவர் 100 சதவீத வருகைப் பதிவை வைத்துள்ளார். இவர் 1468 விவாதங்கள், கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

22 பேர் 50%

22 பேர் 50%

22 எம்.பிக்கள் பாதி அளவு கூட்டங்கள், விவாதங்களில்தான் கலந்து கொண்டுள்ளனர் இவர்களின் வருகைப் பதிவு 50% மற்றும் அதற்கும் கீழே உள்ளது.

சோனியா 5 - ராகுல் 11

சோனியா 5 - ராகுல் 11

கடந்த 3 ஆண்டுகளில் சோனியா காந்தி லோக்சபாவில் 5 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். ராகுல் காந்தி இதில் அதிக அளவில் கலந்து கொணடுள்ளார். அதாவது 11 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார்.

90% மேல் 133 பேர்

90% மேல் 133 பேர்

மொத்தம் உள்ள 545 எம்.பிக்களில் 25 சதவீதம் பேர் அதாவது 133 பேர் 90 சதவீத வருகைப் பதிவை வைத்துள்ளனர். தேசிய அளவிலான சதவீதம் 80 சதவீதமாக உள்ளது.

அன்புமணி

அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் வருகைப் பதிவு 45 சதவீதமாக உள்ளது. அதேசமயம், மற்ற தமிழக கட்சியினர் இதை விட மோசமாகவே உள்ளனர்.

ஹேமமாலினிக்கு 35%தான்

ஹேமமாலினிக்கு 35%தான்

நடிகை ஹேமமாலினின் வருகைப் பதிவு வெறும் 35 சதவீதம்தான். முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் கன்னா 50 சதவீத வருகைப் பதிவை வைத்திருந்தார். இவர் கடந்த ஏபரல் மாதம் புற்றுநோயால் மரமணடைந்து விட்டார்.

English summary
Congress president Sonia Gandhi has a better attendance percentage in Lok Sabha when compared to her son, Rahul Gandhi. Sonia clocked 59 per cent as opposed the 54 per cent that Rahul Gandhi had.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X