இலங்கை அருகே நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை... குமரி, தூத்துக்குடியில் மழை பெய்யலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் சுழல்காற்று வீசும் என்பதால் தென்தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் இயக்குனர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Southern coastal districts of Tamilnadu may get rain : Chennai meteorological department

மன்னார் வளைகுடா, குமரி கடல்பகுதியல் 50 கி.மீ வேகத்தில் சுழல்காற்று வீசக்கூடும். இதனால் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai meteorological department issued warning to south coastal districts of tamilnadu and alerts the fishermen not to go to fishing as the sea tide waves and windy speed is high.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற