இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்... கொந்தளிப்பில் தமிழக மீனவர்கள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். இதனால் தமிழக

மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Srilankan navy force arrested another 12 fisher folk

தமிழக மீன்வர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது. யார் ஆட்சி செய்தாலும் மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல் மட்டும் குறையவில்லை என்பது நிதர்சனம் என்கிறார்கள் பாதிக்கப்படும் மீனவ மக்கள்.

இந்நிலையில் நெடுந்தேவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அதுமட்டுமில்லமல் அவர்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களைடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை சிறையில் அடைபட்டுக்கிடந்த 77 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்தது. ஆனால், அவர்களை விடுதலை செய்த சில நாட்களிலேயே 49 மீனவர்களை சிறைக்கு அனுப்பியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மேலும் 12 பேரை சிறைப்படுத்தியுள்ளது மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே இலங்கை சிறையில் 15 மீனவர்கள் வாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மொத்தம் 77 தமிழக மீனவர்கள் இலங்கையின் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Srilankan navy force blaming Tamil fisher folk poaching into Srilankan Sea side and arrested 12 fisher folk.
Please Wait while comments are loading...