உண்ணாவிரதம் இருப்பதும், சோடா பாட்டில் பேச்சும் அபச்சாரம்... முன்னாள் ஜீயர் விளாசல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உண்ணா உண்ணாவிரதத்திலும் சோடா பாட்டில் வீச்சு பேச்சும் அபச்சாரம்... முன்னால் ஜீயர் விளாசல்- வீடியோ

  ஸ்ரீவில்லபுத்தூர் : 24வது ஜீயர் சடகோப ராமானுஜரின் உண்ணாவிரதம் இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது என்று முன்னாள் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார். சோடா பாட்டில் வீசுவதாக அவர் பேசியுள்ளதும் அபச்சாரமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

  கவிஞர் வைரத்து ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாகவும் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்தூர் 24வது ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம், வாபஸ் என்று ஆடுபுலி ஆட்டம் ஆடி வருகிறார். கவிஞர் வைரமுத்து சர்ச்சையாக பேசியதாகக் கூறிய ராமானுஜரின் செயல்கள் தற்போது அவர் மீதே விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

  Srivilliputhur Madam's 23rd Jiyar condemns 24th Jiyar Ramanujan's hunger strike

  24வது ஜீயரின் செயல்பாடுகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனி மடத்து 23வது பட்டத்து சடகோப ராமானுஜ ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : இப்போது வைரமுத்துவுக்கு எதிராக போராடி வரும் 23வது ஜீயரின் பெயரும் ஸ்ரீ சடகோப ராமானுஜர் தான்.

  அவர் மேற்கொள்ளும் உண்ணாவிரதம் இருப்பது இந்து மத சம்பிரதாயத்திற்கு விரோதமாக இருக்கிறது. வைரமுத்துவை கண்டித்து பேசுவதாகச் சொல்லும் ராமானுஜர் சோடா பாட்டில் வீசுவதாக பேசுவதும், கல்வீசுவோம் என்று சொல்வதும் இந்து மத சம்பிரதாயத்திலேயே இல்லாத ஒன்று, அபச்சாரமானது.

  நமக்குள் இருக்கும் தொந்தரவுகள், மனக்கஷ்டங்கள், பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதை கடைபிடிக்க பூர்வாச்சாரியார்கள் சில வழிகளை சொல்லிக்கொடுத்துள்ளனர். அந்த வழியில் தான் எந்த பிரச்னையையும் சரி படுத்திக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Srivilliputhur Madam's 23rd Jiyar condemns 24th Jiyar Ramanujan's hunger strike and dirty talks in the name of criticising writer Vairamuthu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற