குட்கா ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இந்தப் பிரச்சனை தமிழக சட்டசபையிலும் புயலை கிளப்பியது.

Stalin demanding CBI inquiry on the gutka corruption issue

இந்நிலையில் குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பொருட்களை விற்க அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.

Vijay Mallya had no intention of repaying bank loan, says CBI | Oneindia News

லஞ்சம் கொடுத்தது வருமானவரித்துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin demanding CBI inquiry on the gutka corruption issue. He accused that minister Vijaya baskar gave permission To sell banned drugs after getting bribe.
Please Wait while comments are loading...