மண்டியிடாதீர்கள்.. நீட் திணிக்காதீர்கள் என கேட்பது உரிமை: அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் குட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கேட்காமல் அமைச்சர்கள் மத்திய அரசிடம் மண்டியிட்டு கெஞ்சுவது சட்டசபை சட்ட முன்வடிவிற்கு எதிரானது என்று திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள்: பாஜக எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு நீட் தேர்வுக்கு தற்காலிக தீர்வு கேட்பது, பேரவை சட்ட முன்வடிவின் உணர்வுக்கு எதிரானது. தவணை கேட்க, தள்ளிப்போடுங்கள் என கெஞ்ச, இது ஒன்றும் மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியமல்ல. நீட் திணிக்காதீர்கள் என கேட்பது நம் உரிமை.

 Stalin's Continuous twitter posts about NEET says ministers are begging for their rights at Delhi

நம் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை,மாநில நிதிஆதார மருத்துவ,பல்மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க மத்தியஅரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்?. தமிழ்நாட்டில் வரும் 27ம் தேதி நாம் கோர்க்க இருக்கும் கரங்களால், விண்ணதிர ஒலிக்கும் முழக்கங்களால் நீட் எனும் வல்லாதிக்கத்தை முறியடிப்போம், என்று அவர் டுவீட்டியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MK Stalin says in his twitter page that Tamilnadu ministers are begging for their rights rather ask the centre to stop NEET as it is our rights.
Please Wait while comments are loading...