ரஜினி ஸ்டைலுக்கு ரகளையாக பதிலடி கொடுத்த ஸ்டாலின் ஸ்டைல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆன்மீக அரசியலுக்கு பதிலடி கொடுத்த திராவிட கட்சியின் செயல் தலைவர்!- வீடியோ

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பாணியில் அதிரடியான பதிலடியை நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்தது திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

  ஆன்மீக அரசியல்வாதியாக கருணாநிதியை சந்தித்துச் சென்ற ரஜினிகாந்த்துக்கு பதிலடி தரும் வகையில் இது திராவிட மண். இங்கு வேறு எதுவும் வெல்ல முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தது தி்முகவினரை மட்டுமல்லாமல் மற்ற அரசியல் கட்சியினரையும் கூட ஆச்சரியப்படுத்தியுள்ளது.

  வழக்கமாக இப்படி உடனுக்குடன் பதிலடி கொடுப்பவரல்ல ஸ்டாலின். அது கருணாநிதியின் ஸ்டைல்., தனக்கே உரிய பாணியில் கருணாநிதி, தனது எதிர்ப்பாளர்களுக்கு சுடச் சுட பதிலடி கொடுப்பார். ஆனால் ஸ்டாலின் நிதானம் காத்து பதில் தருவார். ஆனால் நேற்று ரஜினியை முன்னால் போக விட்டு விட்டு அவர் கொடுத்த பதிலடி திமுகவினரை உற்சாகப்படுத்தி விட்டது.

  திராவிடத்தை சந்தித்த ஆன்மீகம்

  திராவிடத்தை சந்தித்த ஆன்மீகம்

  ஆன்மீக அரசியல்வாதியாக தன்னை உருவகப்படுத்தியுள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினும் உடன் இருந்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், கருணாநிதியிடம் கட்சி தொடங்கியதைச் சொல்லி ஆசி பெற்றதாக கூறினார்.

  ஸ்டாலின் கொடுத்த பதிலடி

  ஸ்டாலின் கொடுத்த பதிலடி

  ரஜினியின் பேட்டிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினியின் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார். குறிப்பாக ஆன்மீக அரசியல் குறித்து அவர் விளக்கம் கொடுத்தார். அது ரஜினிக்கு மட்டுமல்லாமல், அவருக்குப் பின்னால் இருப்பதாக கூறப்படும் பாஜகவுக்கு கொடுத்த பதிலாகவும் அமைந்தது.

  திராவிடத்தை வீழ்த்த முடியாது

  திராவிடத்தை வீழ்த்த முடியாது

  ஸ்டாலின் கூறுகையில், ஆன்மிக அரசியலை நடத்தப்போவதாக அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள திராவிட இயக்கத்தை அழித்து விடவேண்டும் என்று சிலர் திட்டமிட்டு, பலருடைய தூண்டுதலால் ரஜினிகாந்த் அவர்கள்கட்சி தொடங்கியிருப்பதாக ஒரு சித்திரத்தை, ஒரு உருவகத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் நான் தெளிவாகச் சொல்லிக் கொள்வது, தமிழ்நாட்டின் மண் திராவிட இயக்கத்தின் மண். தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா,த லைவர் கலைஞர் ஆகியோரால் பண்பட்டு இருக்கின்ற மண் இந்த மண். அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு யார் யாரோ இதற்கு முன் முயற்சித்துப் பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் கதைகள் எல்லாம் நாட்டுக்கே நன்கு தெரியும் என்றார் ஸ்டாலின்.

  எதிர்பாராத பதிலடி

  எதிர்பாராத பதிலடி

  இதுவரை மு.க.ஸ்டாலின் இப்படிப் பேசியதில்லை. அதாவது கருணாநிதியைச் சந்தித்து விட்டுச் செல்லும் தலைவர்கள் குறித்து அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் அவர் பேசியதே இல்லை. ஆனால் ரஜினி கிளம்பிச் சென்ற சில நிமிடங்களிலேயே அவருக்கு அவர் மறைமுகமாக பதிலடி கொடுத்ததாகவே எல்லோரும் பார்க்கிறார்கள்.

  இதுதான் காரணம்

  இதுதான் காரணம்

  ரஜினிக்கும், அவருக்குப் பின்னால் இருப்பதாக கூறப்படும் பாஜகவுக்கும் சேர்த்து ஸ்டாலின் கொடுத்துள்ள பதிலடிக்கு முக்கியக் காரணம், திமுகவை எந்த ரூபத்தில் வந்தாலும் வீழ்த்த முடியாது. அது ரஜினியாகவே இருந்தாலும் கூட நடக்காது என்பதே இதற்கான அர்த்தம். மேலும் ஆன்மீகம் பேசும் ரஜினிக்கு நாங்கள் ஆதரவாக இல்லை என்பதையும் மற்ற சிறுபான்மையினருக்கு திமுக தெளிவாக உணர்த்தியுள்ளதாகவும் இதற்கு பொருள் கொள்ள முடியும்.

  விஜயகாந்த்துடன் ரஜினியை ஒப்பிட்ட ஸ்டாலின்

  விஜயகாந்த்துடன் ரஜினியை ஒப்பிட்ட ஸ்டாலின்

  தனது பேட்டியின்போது விஜயகாந்த்துடன், ரஜினியை மறைமுகமாக ஒப்பிட்டுக் குறிப்பிட்டார் ஸ்டாலின். ஸ்டாலின் கூறுகையில், நடிகர் விஜயகாந்த் அவர்கள் புதிய கட்சி தொடங்கியபோதும் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். எனவே, அரசியல் பண்பாடு மற்றும் அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் தலைவர் கலைஞர் அவர்களும் அவரை இன்முகத்தோடு வாழ்த்தி இருக்கலாம். அதையே நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் சொல்லியிருப்பதாக நான் கருதுகிறேன் என்றார் ஸ்டாலின். இப்போது விஜயகாந்த்தின் நிலை அனைவரும் அறிந்ததே.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK working president MK Stalin has clarified the meeting of DMK president Karunanidhi and Actor Rajinikanth and said that Dravidian movement cannot be defeated by any kind of foce, he pointed Rajinikanth indirectly.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற