காவிரி வழக்கை திரும்ப பெறாவிட்டால் கருப்பு என்கிற நெருப்பு அணையாது- ஸ்டாலின் எச்சரிக்கை #GoBackModi

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உலக அளவில் டிரெண்டான #gobackmodi என்ற ஹேஷ்டேக்- வீடியோ

  நாகை: காவிரி தீர்ப்புக்கு எதிராக போடப்பட்ட வழக்கை திரும்ப பெறாவிட்டால் கருப்பு என்கிற நெருப்பு அணையாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் சென்னையில் ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார் பிரதமர் மோடி.

  Stalin says Modi government should with draw the cases filed against Cauvery judgement

  காவரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்னை வரக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழ், விவசாய அமைப்புகளும் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு ஆடை அணிந்தும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இந்த நிலையில் சீர்காழியில் காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை தொடங்கிய ஸ்டாலின் டுவிட்டரில் மோடிக்கு எச்சரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து இன்று, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் இல்லங்களின் கருப்புக் கொடியேற்றியும், கருப்புடையணிந்தும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இனியாவது, விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்!

  விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது! என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK Working President MK Stalin says that Modi should withdraw the cases filed against Cauvery judgement otherwise the black fire wont off.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற