அரிசியிலும் அநியாய கலப்படம்... அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரிசி, முட்டை, சர்க்கரையில் கலப்படம் என்று வருகிற செய்திகள் அடிப்படையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி,தீபா அணி என பல்வேறு அணிகளாகப் பிரிந்துள்ளது.

 Stalin slams Tamilnadu government in food adulteration issue

தமிழக அரசு பாலில் கலப்படம் இருக்கிறது என கூறியது. அதைச் செய்பவர்களை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தர முயற்சி செய்தார்களா? அதன் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. இதற்கிடையில் தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை,முட்டையில் கலப்படம் என்று தொடர்ந்து வரும் செய்திகள் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுத்தது? இதுகுறித்து மக்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்க என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பினார்.

மேலும், காந்தி குறித்து பாக தலைவர் அமித்ஷா ஒரு கூட்டத்தில் பேசும் போது, காந்தி ஒரு வியாபாரி என்று கூறியிருக்கிறார். அமித்ஷாவின் கருத்து குறித்துக் கூறிய மு.க.ஸ்டாலின், பூங்கொத்தைப் போல் இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு என்று கூறிய காந்தியையே வியாபாரி என்று கூறிய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்து வேதனைக்குரியது. பாஜக மிருக பலத்துடன் இருப்பதால் இவ்வாறு அமித்ஷா பேசி வருகிறார். அவருக்கு என் கடும் கண்டனங்களை திமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
What Tamilnadu government has done for the pouring complaints about adulteration in rice, sugar and egg asked M.K.Stalin.
Please Wait while comments are loading...