பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அரசு குறைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை அரசு குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் பெட்ரோல் டீசல் விலையுடன் தமிழக அரசு வாட் வரியை சேர்த்து விற்பனை செய்கிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலையை மேலும் அதிகரிக்கிறது.

Stalin urges Tamil nadu Govt to reduce vat on Petrol diesel price

இந்நிலையில் வாட் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவை போல் உடனடியாக வாட் வரியை குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் அப்போதைய கருணாநிதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை குறைத்ததாக ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin urges Tamil nadu Govt to reduce vat on Petrol diesel price. He mentioned Gujarath and maharashtra has reduced vat on petrol diesel price.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற