For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கவேண்டும்:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திமுக சார்பில் திருச்சியில் இருந்து சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி ஸ்டாலின் திருச்சியில் பயணத்தை தொடங்குகிறார். இந்த பயணத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

State govt to take stand against Central govt: Indian union muslim league

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி முக்கொம்பிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்த நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி ஸ்டாலின் திருச்சியில் பயணத்தை தொடங்குகிறார். திருச்சி முக்கொம்பிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்த பயணத்தை 7ஆம் தேதி மாலை 4 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

7 நாட்கள் மேற்கொள்ளும் வகையில் பயணத்திட்டம் வகுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. காவிரி உரிமை மீட்பு பயணத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி,திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கின்றன. நமக்கு நாமே பயணம் செய்த ஸ்டாலின் இப்போது காவிரி உரிமை மீட்பு பயணம் செய்ய உள்ளார்.

இந்த விழா ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு, மாநகர மாவட்ட செயலாளர் மு.அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

காவேரி ஆணையத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிரான நிலைபாட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக எடுக்க வேண்டும் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாககிகளின் அவசர ஆலோசனை கூட்டம் புதன்கிழமை இரவு பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். கூட்டத்தை 12 வார்டு நிர்வாகி சபியுல்லா கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் தொகுதி துணை அமைப்பாளர் அரியமங்கலம் முஸ்தபா அனைவரையும் வரவேற்று பேசினார்.

திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ஹாஜி அப்துல் வஹாப், வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேசிய நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் பல்வேறு நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முனைவர் எம்.ஏ.எம். நிஜாம், தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், தேசிய கவுன்சில் கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பளராக மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் ஜி.ஏஸ்.ஏ. மன்னான், மாநில பொதுக்குழ உறுப்பினர்கள் கவிஞர் கா.சையது ஜாபர், ஓய்வு பெற்ற தாசில்தார் அம்சத் இப்ராஹிம், மாநில மகளிர் அணி பொருளாளர் ஷஸ்மினாஸ் நிஜாம், மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் அன்சர் அலி ஆகியோரை தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்தோடும் மற்றும் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன், மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ.எம். முஹம்மது அபுபக்கர் மற்றும் தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுக்கு திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

திமுக சார்பில் திருச்சியில் இருந்து சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி ஸ்டாலின் திருச்சியில் பயணத்தை தொடங்குகிறார். இந்த பயணத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இந்த பேரணியில் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இந்த பேரணியில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

வருகிற 7 ஆம் தேதி திருச்சியில் மாலை நடைபெறும் மாநில யூத் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்தி கொடுப்பதுடன். கூட்டத்தில் அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் ஆறு வார காலத்துக்குள் காவேரி ஆணையத்தை அமைக்க சொல்லியும் அதை அமைக்காத பிரதமர் நரேந்திர மோடியை இக்கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும் தமிழக அரசு மெத்தன போக்கையும் காரணம் இக்கூட்டம் கண்டிக்கிறது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி அரசாங்கம் விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமலும், அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க மறுத்திருப்பதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து தமிழர்களை வஞ்சித்திருக்கின்றது. தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்மூடித்தனமாக தமிழக அரசு பின்பற்றி தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தவறிவிட்டது. மத்திய-மாநில அரசுகளின் முகமூடியை கிழித்தெறிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டங்கள் நடைபெறும்.

உடனடியாக தமிழக அரசு காவேரி ஆணையத்தை அமைக்கவும் மேலும் மத்திய அரசுக்கு எதிரான நிலைபாட்டை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இனிமேல் தமிழக மக்களை ஏமாற்றாமல் உடனடியாக காவேரி ஆணையத்தை அமைக்காவிட்டால் தமிழக அரசு மிகப்பெரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க நேரிடும்.எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்டா பாசன விவசாயிகள் வாழ்வாதரத்தை நல்ல முடிவுகளை விரைவில் எடுக்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது. என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் திருச்சி தெற்கு இளைஞர் அணி தலைவர் அமீருதின், தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சாதிக்குல் ஆமீன், திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.யூ. செயலாளர் பரக்கத் அலி, தெற்கு மாவட்ட எஸ்.டி.யூ. துணை தலைவர் ஆட்டோ அப்துல் சலாம், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் ஷாகுல் ஹமீது, தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் நிஜார் அஹமது, தெற்கு மாவட்ட மாணவரணி துணை தலைவர் சம்சுதீன், 44 வார்டு தலைவர் நூர் முஹம்மது, 49 வார்டு தலைவர் முஹம்மது ஆரிப், மாவட்ட பிரதிநிதி டைலர் ஷர்புதீன, மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம். ஹூமாயூன் தொகுத்து வழங்கினார்.

English summary
On April 7th DMK working president Stalin starts his Cauvery rights rescue mission from Trichy to Chennai. Indian union muslim league conducts meeting to discuss about that. In this meet Indian union muslim league passed resolution that State govt to take stand against Central govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X