For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ஆசிரியை உமாமகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டு சிறை

By Mathi
Google Oneindia Tamil News

Student gets 2 year jail in Chennai teacher murder case
சென்னை: வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை மாணவனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வகுப்பறையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஆசிரியை உமா மகேஸ்வரி, 9ஆம் வகுப்பு மாணவனால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

மாணவர்களிடன் மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தவர் ஆசிரியை உமா மகேஸ்வரி. அவர் சம்மந்தப்பட்ட மாணவனின் தேர்ச்சி அறிக்கையில் கல்வி நிலை மோசமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் மாணவனை பெற்றோர் திட்டினர்.

இதில் ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியையை வகுப்பறையிலேயே குத்திக்கொன்றான். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு சென்னை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி மாணவனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். சிறார் இல்லத்தில் மாணவனுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
17 years old Student got 2 years jail term in Chennai teacher murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X