For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோவர் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்ப தமிழக மாணவர்கள் முயற்சி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    காசிமேட்டில் குவிந்த மக்கள் | தமிழக மாணவர்களின் அசாத்திய முயற்சி- வீடியோ

    சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இளம் மாணவர்கள் சிறிய அளவிலான ரோவர் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அசத்தியுள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி,தமிழகப் பள்ளி மாணவர்கள் நாசா விண்கலத்தின்மூலம் 64 கிராம் எடை கொண்ட 'கலாம்சாட்' என்ற நானோ செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினர்.

    Students from Tamil Nadu trying to send a small rover to the moon

    முதல் ஆண்டுக் கொண்டாட்டத்தில் மீண்டும் ஒன்று கூடிய அவர்கள், அடுத்த ஆண்டு சந்திரனுக்கு, ரோவர் வாகனத்தை அனுப்பும் திட்டத்தைத் தொடங்கியுள்ளனராம்.

    இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்புப் பணியை 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' நிறுவனத்தின் தலைவர் ஶ்ரீமதி கேசன் மேற்கொண்டு வருகிறார்.

    Students from Tamil Nadu trying to send a small rover to the moon

    அவர் கூறுகையில், "கலாம்சாட் நானோ செயற்கைக்கோள் திட்டத்தைத் தொடர்ந்து 5 புதிய திட்டங்களைத் தொடங்கியிருக்கிறோம். இதில் முதன்மையானதாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக்கொண்டு 'நிலவு மிஷன்' என்ற திட்டத்தின்படி, '3டி' வடிவமைப்பில், சந்திரனில் ரோவர் விண்கலத்தைத் தரையிறக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம் என்றார்.

    Students from Tamil Nadu trying to send a small rover to the moon

    மேலும் அவர் கூறுகையில், இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் உள்ள இளைஞர்களும் எங்களுடன் கைகோக்கலாம் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.

    சந்திரனுக்கு அனுப்பப்பட உள்ள இந்த விண்கலம் அங்குள்ள மண்ணின் தரம் மற்றும் ஈர்ப்பு விசை குறித்து கண்டறிவதற்கும் மனிதர்கள் அங்கு வசிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என ஆய்வு செய்யவும் பயன்படும் என்று, கலாம் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ரிபாத் தெரிவித்துள்ளார்.

    விண்கலம் அனுப்புவதற்குத் தேவையான பணிகளை ராஜஸ்தான் அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக ஸ்ரீமதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விண்வெளி ஆய்வு பூங்கா அமைத்தால் இதே போல் பல மாணவர்களை உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

    English summary
    Young students from Tamil Nadu have been trying to send a small rover to the moon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X