தினகரன் லஞ்சம் கொடுத்ததற்கு ஆதாரம் இருக்கா? சப்பைக்கட்டு கட்டும் பொர்க்கி புகழ் சு.சாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலைச் சின்னத்தை பெற டிடிவி .தினகரன் லஞ்சம் கொடுத்ததற்கு ஆதாரம் உள்ளதா என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை முடக்கியது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் சாடியுள்ளார்.

தமிழர்களை பொறுக்கி என்று கூறுவதும் அவ்வப்போது டிவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வாங்கிக்கட்டிப்பதும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு வாடிக்கையாகிவிட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுப்பிரமணிய சாமி சசிகலா தரப்புக்கு அளித்து வரும் ஆதரவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரன் இரட்டை இலைச்சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்திய அரசியலில் களேபரம்

இந்திய அரசியலில் களேபரம்

தேர்தல் ஆணையத்துக்கே தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். அவரது இந்த செயல் இந்திய அரசியலில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் கமிஷனுக்கு கண்டனம்

இந்நிலையில் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக சுப்பிரமணிய சாமி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தினகரன் லஞ்சம் கொடுத்ததற்கு ஆதாரம் இருக்கா? என கேட்டுள்ள சுப்பிரமணிய சாமி, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது கண்டிக்கதக்கது என கூறியுள்ளார்.

சுப்பிரிம் கோர்ட்டை மதிப்பதில்லை

சுப்பிரிம் கோர்ட்டை மதிப்பதில்லை

சுப்ரீம் கோர்ட்டின் பல உத்தரவுகளை தேர்தல் கமிஷன் மதிப்பதில்லை என்றும் சுப்பிரமணிய சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தினகரனுக்கு எதிராக சினிமா டிராமா நடத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் திமுகவின் பினாமி

ஓபிஎஸ் திமுகவின் பினாமி

மேலும் ஓபிஎஸ் திமுகவின் பினாமியாக செயல்படுகிறார் என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். டிடிவி.தினகரனுக்கு ஆதரவான சுப்பிரமணிய சாமியின் இந்த பதிவுகளுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Subramaniya samy suppors TTV Dinakaran. He is asking proof the bribe accusation on TTV Dinakaran. Subramaniya samy condemns Election commission for freezing Double leaf symbol.
Please Wait while comments are loading...