ரஜினியுடன் கூட்டணி வைத்தால் வேறு மாநிலத்துக்கு செல்வேன்... பாஜகவுக்கு சு.சுவாமி வார்னிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனது எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தால் வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுவேன் என்று சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஜினி தனிக்கட்சி தொடங்குவதாகவும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார். ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி பாஜகவுடன் இணைவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Subramaniyan Swamy says that he will go to another state

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி ஆங்கில செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் அவரிடம் எந்த கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லை. ரஜினியை ஊடகங்கள் தான் பெரிதாகக் காட்டுகின்றன. தமிழக மக்கள் புத்திசாலிகள்.

ரஜினி படிப்பறிவில்லாதவர் என்றெல்லாம் சுவாமி கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்க கூடாது. அதையும் மீறி வைத்தால் நான் வேறு மாநிலத்துக்கு செல்வேன்.

ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் மாறாது. தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்றார் சுவாமி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP MP Subramaniyan Swamy says that he will go to another state if BJP make alliance with Rajini.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற