இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தார் டிடிவி தினகரன்.. தொழிலதிபர் வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி.தினகரன் டெல்லி தொழிலதிபர் ஒருவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சுகேஷ் சந்திராவிடம், தினகரன் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருமாறு கூறி 1 கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

Sugesh Chandra says he is got money from TTV Dinakaran

தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே பெற்றுத்தர வேண்டும் என்று, டிடிவி தினகரன்தான் தனக்கு பணம் கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளாராம். தேர்தல் ஆணையத்தில் இவ்வாறு லஞ்சம் பெற்றுக்கொண்டு சின்னத்தை ஒதுக்கிக் கொடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன் மீது வழக்கு இன்னும் வலுவாகலாம் என்று கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Industrialist Sugesh Chandra says he is got money from TTV Dinakaran.
Please Wait while comments are loading...