For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு திருவாரூர் கோர்ட் சம்மன்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

karunanidhi
திருவாரூர்: தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த தேர்தலின்போது தனது சொத்துக்கணக்கை குறைத்து காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்ப திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பரமசிவம், திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 31ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலின்போது, முன்மொழிவு பத்திரத்தில் திருவாரூர் அருகேயுள்ள காட்டூர் மற்றும் திருநள்ளூர் பகுதியிலுள்ள தனது சொத்துக்கணக்கை, கருணாநிதி குறைத்து காண்பித்ததாகவும், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 177ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கவிதா முன்னிலையில் வெள்ளிக்கிழமை வந்தது. இதை விசாரித்த நீதிபதி, கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். வரும் மார்ச் 7ம் தேதி திருவாரூர் நீதிமன்றத்தில் கருணாநிதி ஆஜராகவேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி கவிதா குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tiruvarur JM Court on Friday issued summons to DMK president and Tiruvarur MLA M.Karunanidhi to appear before the court on March 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X