உயிர் பயத்தில் மாதவனை அழைத்த தீபா...போயஸ் வாசலில் கண்ணீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை போயஸ் கார்டன் வரவழைத்து திட்டமிட்டே தீபக் தாக்கியதால் உயிர் பயத்தில் கணவருக்கு போன் போட்டு அழைத்ததாக ஜெ. தீபா கூறியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டனுக்கு வருமாறு சகோதரர் தீபக் காலையில் இருந்து தன்னை தொலைபேசியில் தொந்தரவு செய்ததாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார். போயஸ் கார்டனுக்குள் என்னை விடமாட்டார்கள் நான் வரமோட்டேன் என்று சொன்னபோதும், விடுவார்கள் வா என்று தீபக் சொன்னதாக தீபா தெரிவித்துள்ளார்.

Sunday drama at poes garden merged J.Deepa and her husband Madhavan

போயஸ் கார்டனுக்குள் வந்து ஜெ. அம்மா படத்திற்கு மலர் தூவி விட்டு சென்று விடுமாறு கூறிவிட்டு தன்னையும், தனமு உதவியாளரையும் தாக்கியதாக தீபா கூறியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளானதாகவும், அவர்களாலேயே தாங்கள் தப்பித்ததாகவும் தீபா கூறினார்

உள்ளே பிடித்து வைத்துக் கொண்டு அடித்ததை பார்த்து உயிர் பயத்திலேயே கணவர் மாதவனை அழைத்ததாக தீபா தெரிவித்தார். ஜெ.தீபா பேரவையில் நிர்வாகிகளை நியமித்ததில் மனஸ்தாபம் ஏற்பட்டு தீபாவும் மாதவனும் பிரிந்திருந்தனர். தீபாவிற்கு எதிராக மாதவன் தனிக்கட்சியையும் தொடங்கினார்.

கட்சிப் பிரச்னை காரணமாக கணவன், மனைவியிடையே விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று போயஸ் கார்டனில் நடந்த சம்பவத்தால் கடைசி வரை தீபாவிற்கு அரவணைப்பாக இருந்து அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தார் தீபா. மனைவி கண்ணீர் மல்க பேட்டியளிக்கும் போது அருகில் அமைதியாக இருந்த மாதவன் அவ்வப்போது தீபா காதில் எதையோ கிசுகிசுத்துக் கொண்டே இருந்தார்.

இத்தனை ரணகளத்திலும் நடந்த நல்ல விஷயம் என்னவென்றால் கட்சியால் பிரிந்த இளம்ஜோடி, மீண்டும் போயஸ் களேபரத்தால் ஒன்னுகூடிட்டாங்கங்கிறது தான்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Poesgarden sunday drama turns as a bad day for reporters but a good day for the couple J.Deepa and Madhavan.
Please Wait while comments are loading...