For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சஸ்பென்ட் காலம் முடிந்து சட்டசபைக்கு வந்த 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேரும் இன்று சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த பிப்ரவரியில் சட்டசபை கூட்டத்தின் போது தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகன் சட்டசபையில் பேசினார். அப்போது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்கள் வழியை பின்பற்றுங்கள்' என்றார். இதற்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

Suspended DMDK MLAs return to Assembly

அப்போது நடந்த கைகலப்பு அடிதடியில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தாக்கப்பட்டார். மைக்கேல் ராயப்பனை தாக்கியதாக தேமுதிகவின் 6 எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் ஓராண்டுகாலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த ஓராண்டு காலம் 6 மாதமாக குறைக்கப்பட்டது. தற்போது 6 மாத காலம் முடிவடைந்ததால் இன்று 6 பேரும் சட்டசபைக்கு வந்திருந்தனர்.

சட்டசபையில் வழக்கம்போல அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள் தனியே அமர்ந்து கொண்டனர்.

English summary
6 Desiya Murpokku Dravidar Kazhagam MLAs today return to the Assembly who were suspended for the Six months, it was ended on 24th sep.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X