For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உசிலம்பட்டி, மணப்பாறையில் ஜல்லிக்கட்டு: தடையை மீறி சீறி பாந்த காளைகள்

உசிலம்பட்டி அருகே இரு கிராமங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பசுக்காரன்பட்டி, காக்கிவீரன் பட்டியில் 15 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மணப்பாறையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை/திருச்சி : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தடையை உடைப்போம் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று கூறி ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விட்டு ஏறு தழுவுதலை நடத்தி உற்சாக குரல் எழுப்பி வருகின்றனர் இளைஞர்கள்.

symbolic Jallikattu event in Usilampatti and Manaparai

கடந்த 3 தினங்களாக ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அடுத்துள்ள ஆவாரம்பட்டியில் தற்காலிக வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்று வருகின்றது. ஜல்லிக்கட்டில் 40க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உசிலம்பட்டி அருகே இரு கிராமங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பசுக்காரன்பட்டி, காக்கிவீரன்பட்டியில் 15 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் ரெண்டளபாளையத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் பல காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அங்கிருந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர்.

English summary
Villagers in Usilampatti and Manaparai held their ‘symbolic’ Jallikattu event in after prayers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X