அமைதிப்படை அல்வா வாசு கல்லீரல் நோயால் மரணம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
வறுமையில் வாடி இறந்து போன அல்வா வாசு-வீடியோ

மதுரை: நடிகரும் உதவி இயக்குநருமான 'அல்வா' வாசு உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார்.

நடிகர் வாசு இயக்குநர் மணிவண்ணன் இயக்கிய 'அமைதிப்படை'யில் உதவி இயக்குநராக பணிபுரிந்த போது சிறு வேடத்தில் நடித்தார். பிறகு பல்வேறு படங்களில் நடிகர் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் தோன்றி நடித்திருப்பார். 900 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அல்வா வாசு.

கல்லீரலில் நோய் காரணமாக பல மாதங்கள் உடல்நலம் குன்றி இருந்தார். அதனையடுத்து மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தால் புதன்கிழமையன்று அவரை வீட்டுக்கு அழைத்துச்செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட 'அல்வா' வாசு நேற்று இரவு மரணமடைந்தார். வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும் கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Comedian Alwa Vasu expired due to liver disease. He has one girl child and wife Amutha.
Please Wait while comments are loading...