For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது கற்கள்,பாட்டில்களை வீசி தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 15க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் காயமடைந்த மீனவர்கள் இரவோடு இரவாக அச்சத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

 Tamil fisherman attacked by Sri Lankan navy

சமீபத்தில் ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை நடுக்கடலில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த பிறகு, மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tamil fisherman attacked by Sri Lankan navy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X