For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்வு முடிவால் மனச் சோர்வா?... ஆலோசனை தரக் காத்திருக்கும் சினேகா!

Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து அதில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் மதிப்பெண் குறைந்ததால் அப்செட் ஆனவர்களுக்கு மன நல கவுன்சிலிங் தர சினேகா என்ற தொண்டு நிறுவன அமைப்பு தயாராக உள்ளது.

இந்த அமைப்பானது தற்கொலைத் தடுப்புக் குழுவுமாகும். இந்த அமைப்பின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மாணவ, மாணவியர் மட்டுமல்லாமல் பெற்றோர்களும் கூட ஆலோசனை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 044 - 2464 0050 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். மே 9ம் தேதியான இன்று முதல் 20ம் தேதி வரை இந்த எண்ணை எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

இதுதவிர 044 -24640060 என்ற வழக்கமான ஹெல்ப்லைன் எண்ணும் சினேகா அமைப்பில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவால் ஏற்படும் பதட்டம், பயம், விரக்தி, கோபம், அவமான உணர்வு, வெறுப்பு, சோகம் உள்ளிட்ட எந்த விஷயத்துக்காகவும் மாணவ, மாணவியர் சோர்வடையத் தேவையில்லை, இதற்காக தற்கொலை உள்ளிட்ட முடிவுகளை நாடுவது தவறு என்று கூறும் சினேகா, இதற்காக உரிய ஆலோசனைகளை உரிய நிபுணர்கள் மூலம் தாங்கள் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் விவரம் அறிய [email protected] என்ற இமெயிலுக்கு மெயில் அனுப்பியும் உதவி பெறலாம்.

English summary
Sneha, a suicide prevention group, will operate a round-the-clock helpline (044 - 2464 0050) for students starting on Friday (May 9) when Class 12 results are announced.
 The helpline will be available from May 9 till May 20. This is in addition to the regular helpline (044 -24640060).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X