ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இது மாதிரி இருந்திருக்குமா.. பொன் ராதா ஆதங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: தமிழக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் உரிய நடவடிக்கைகளை உடன்குடன் எடுத்து இருப்பார் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாகப்பட்டிணத்தில் அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பிறகு இதுவரை 20 கோடிக்கும் அதிகமான பேர் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர்.

Tamil Nadu government lacked strong leadership

இந்த வங்கி கணக்குகளில் ரூ 65 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் விபத்து காப்பீடு திட்டத்தில் இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமான பேர் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் 15.87 லட்சம் பேரும், நாகை மாவட்டத்ல் 1.73 லட்சம் பேரும் சேர்ந்துள்ளனர். ஆயுள் காப்பீடு திட்டத்தில் 3 கோடி பேர். தமிழகத்தில் 22.45 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.

விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடப்பாண்டு மத்திய அரசு ரூ. 10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்து இருப்பார். இப்போதய தமிழக முதல்வர் சரியாக செயல்படவில்லை.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம். அவர் பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union Minister of State for Highways and Shipping Pon Radhakrishnan Charging that Tamil Nadu government lacked strong leadership, he said the Chief Minister should take decisions in a bold manner for rapid development.
Please Wait while comments are loading...