நான் நன்றாக வளர்ந்துவிட்டேன்.. உங்கள் தலைவர்தான் இன்னும் வளரல.. துரைமுருகனுக்கு தமிழிசை நச் பதில்!

இன்னும் குழந்தையாகவே இருக்கிறார் என்று கூறிய துரைமுருகனுக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழிசை இன்னும் குழந்தையாவே இருக்கிறார்-துரைமுருகன்!

    சென்னை: இன்னும் குழந்தையாகவே இருக்கிறார் என்று கூறிய துரைமுருகனுக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

    கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு சென்னையில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சவுந்தரராஜன் விழா முடிவடைந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார்.

    செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழிசை பதில் அளித்துக் கொண்டு இருந்த நேரத்தில் அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் பெட்ரோல் விலை தினமும் உயர்ந்து வருகின்றதே என்று கேள்வி எழுப்பினார்.

    ஆட்டோ ஓட்டுநருடன் சந்திப்பு

    ஆட்டோ ஓட்டுநருடன் சந்திப்பு

    இதனால் ஆட்டோ ஓட்டுனரை பாஜகவினர் அடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை அடிக்கவில்லை, அவரை அப்புறப்படுத்தியதாக நேற்று விளக்கமளித்தார் தமிழிசை.மேலும் ஓட்டுனரின் வீட்டுக்கு ஸ்வீட்டுடன் நேரில் சென்று சந்தித்து பேசினார்.

    தமிழிசை ராணியா?

    தமிழிசை ராணியா?

    இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் பாஜகவினரால் தாக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன் உலகத்தில் பெரிய எலிசபெத் ராணியா தமிழிசை? யாரும் எதையும் கேட்கக்கூடாது என்று சொல்வதற்கு. இது ஜனநாயக நாடு.

    சிறையில் தள்ளுவது

    சிறையில் தள்ளுவது

    யாரும் எதையும் கேட்டுக்கொண்டுதான் இருப்பான்.
    ஒருவர் கேள்வி கேட்பதே தவறு, அதற்குப் பயந்துகொண்டு அவரை அடிப்பது, அவர் மீது வழக்குபோடுவது, சிறைக்குள் தள்ளுவது என்ன நடைமுறை என்று தெரியவில்லை.

    குழந்தையாகவே இருக்கிறார்

    குழந்தையாகவே இருக்கிறார்

    தமிழிசை அரசியலில் இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். சின்னக் குழந்தையிலிருந்து எனக்கு தமிழிசையைத் தெரியும். இன்னும் குழந்தையாகவே இருக்கிறார் என்று சிரித்துக்கொண்டே கூறிச்சென்றார்.

    தமிழிசை பதிலடி

    தமிழிசை பதிலடி

    இந்நிலையில் துரைமுருகனின் கிண்டலான பதிலுக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, 'ஆட்டோ டிரைவர் அடித்ததை பார்த்து நான் சிரித்தேன் என்று சொல்வது தவறு, அதில் உள்நோக்கம் கிடையாது.

    கதிரை பார்த்தேன்

    கதிரை பார்த்தேன்

    இரவு நேரத்தில் ஒரு பெண் தலைவருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்ற அடிப்படையில்தான் அவரை அங்கிருந்து விலக்கி விட்டார்கள். இந்த விவகாரத்திற்காக பாஜகவை கேள்வி கேட்டால் அடிப்பார்கள் என்று சொல்வதை ஏற்க முடியவில்லை ஆகையால்தான் நான் நேரடியாக சென்று கதிரை பார்த்து வந்தேன்.

    அவருக்கு தெரியும்

    அவருக்கு தெரியும்

    துரைமுருகன் நான் இன்னும் வளர வேண்டும் என்று சொல்கிறார். நான் அவருடனே சேர்ந்து வளர்ந்தவர், நான் எப்படி வளர்ந்தேன் என்று அவருக்கும் நன்கு தெரியும். அதனால் தான் ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கிறேன்.

    ஸ்டாலின் எப்படி இருக்கிறார்?

    ஸ்டாலின் எப்படி இருக்கிறார்?

    நான் வளரவில்லை என்று சொன்னால் கருணாநிதியின் மகன் எப்படி இருக்கிறார்?' நான் இன்னும் வளரவில்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தமிழிசை துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+