பெரியார் சிலை பற்றிய கருத்து.. எச்.ராஜாவை கைவிட்டது பாஜக தலைமை!

திருநெல்வேலி : பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச். ராஜா கூறியது அவருடைய சொந்த கருத்து என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. எச். ராஜாவின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக நிர்வாகிகள் மழுப்பலாகவே பதில் அளித்து வந்தனர்.

இந்நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது : தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச். ராஜா பதிவிட்டிருந்தது அவருடைய சொந்த கருத்து. அவருடைய கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!