சட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள ஆதரிப்பதாக பாமக அறிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ல் எண்ணப்படும்.

இரு தொகுதிகளுக்குமான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. நாங்குநேரியில் காங்கிரஸும் விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் திமுகவும் அதிமுகவும் இரு தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களைப் பெற்றும் வருகின்றன. இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுவென களைகட்டிய வருகிறது.
இந்நிலையில் இரு தொகுதிகளிலும் அதிமுகவை ஆதரிப்பதாக பாமக அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. ஆனாலும் பாமக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இதன்பின்னர் பாமகவின் அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை கொடுத்தது அதிமுக.
அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்குப் பாடுபடப் போவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இடைத்தேர்தல் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் இதுவரை பாஜக எடுக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications