For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடிய விடிய பெய்த கனமழை.. குளங்கள், கண்மாய்கள் நிரம்பியது!

தமிழகத்தில் பல இடங்களில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்துள்ளது.

வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இன்றில் இருந்து நாளை வரை இந்த கனமழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

[ராப்.. ராக்கை தூக்கி போடுங்க.. நித்தியானந்தாவின் இந்த பாட்டை கேளுங்க! ]

எங்கு பெய்தது

எங்கு பெய்தது

நேற்று இரவு முழுக்க தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், திருவள்ளூர், ஈரோடு பகுதிகளில் மழை பெய்தது.

சென்னை மற்றும் பிறபகுதிகள்

சென்னை மற்றும் பிறபகுதிகள்

சென்னையில் இரவு முழுக்க மழை பெய்தது. சாலையில் பல இடங்களில் இதனால் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது. அதேபோல் மழை காரணமாக ஈரோட்டில் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கொடிவேரியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேதங்கள்

சேதங்கள்

மழையால் விருதுநகரில் சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மழையால் சத்தியமங்கலம் - கோவை நெடுஞ்சாலையில் தற்காலிக பாலம் ஒன்று சேதமடைந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. திருவாரூர், நாகை உள்ளிட்ட சில இடங்களில் வீடுகள் சேதம் அடைந்து இருக்கிறது.

இன்றும் பெய்யும்

இன்றும் பெய்யும்

பல மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள் இதனால் நிரம்பி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu met with heavy rain yesterday. Heavy rain expected pour today also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X