நாட்டுக்காக தியாகங்கள் செய்த எச்.ராஜாவை கருணாசோடு ஒப்பிடுவதா.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதங்கம்
சென்னை: எச்.ராஜா பல தியாகங்களை நாட்டுக்கு செய்து உயர்ந்த இடத்திற்கு வந்தவர் என்று, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் டிவி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் உதயகுமார் கூறிய சில வார்த்தைகளை அந்த டிவி சேனல், நிகழ்ச்சிக்கான விளம்பர காட்சிகளாக, ஒளிபரப்பி வருகிறது. அதில், எச்.ராஜாவை கைது செய்ய உங்களுக்கு பயமா என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதற்கு, உதயகுமார் கூறியதாவது:

எச்.ராஜா, இந்தியாவிலுள்ள 19 மாநிலங்களில் ஆளும், கொள்கை, லட்சியத்தோடு உள்ள மாண்புமிகு பாரத பிரதமர் தலைமையில் இயங்குகின்ற, இந்த தேசத்திற்காக உழைத்த ஒரு இயக்கத்தின் (பாஜக) பொதுச்செயலாளராக இருப்பவர்.
எந்த நிலையில் அந்த இடத்திற்கு வந்திருப்பார்? எத்தனை உழைப்புகள், சேவைகள், தியாகங்களை இந்த நாட்டுக்கு செய்திருப்பார். அவரை கையாளும் விதமும், நேற்று ஒரு இயக்கத்தை துவங்கி, அதிருஷ்டவசமாக சட்டசபை உறுப்பினராகி, இன்று அதிருஷ்டத்தை தொலைத்துவிட்டு, தனக்கு அங்கீகாரம் இல்லையே என்று, மீடியா விளம்பரத்திற்காக உளறுவதை (கருணாஸ்) வைத்து அவரையும், இவரையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க கூடாது. இவ்வாறு உதயகுமார் தெரிவித்துள்ளார்.
[என்னதான் நடக்கிறது ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில்? ரசிகர்கள் கடும் ஆதங்கம்]
பாஜகவில் கூட ராஜாவிற்கு இவ்வளவு மரியாதை கொடுத்து யாரும் பேசியதில்லை, ஆனால், அதிமுகவில் அவரது அருமையை தெரிந்து வைத்துள்ளார்கள் என புழகாங்கிதம் தெரிவிக்கிறார்கள், ராஜா ஆதரவாளர்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications