திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியிடம் பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை.. பழனியில் அதிர்ச்சி
பழனி : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
கைதான ஆசிரியர் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
ஆங்கில ஆசிரியர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அடிக்கடி ஆசிரியர்கள் மீது புகார்
கோவை மாவட்டத்தில் ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கூறி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டனர். "பாலியல் தொல்லையால் உயிரிழப்பது நானே கடைசியாக இருக்க வேண்டும்" என கடிதம் எழுதி வைத்து விட்டு இன்னொரு மாணவி கரூரில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது அமரபூண்டி கிராமம். இங்கே அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் நாட்ராயன். நந்தவனப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாட்ராயனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு வயது 30. இந்நிலையில் அதே படிக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கு, ஆசிரியர் நாட்ராயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

காதலிப்பதாக ஆசிரியர் நாடகம்
இந்த விஷயத்தை வெளியில் சொல்ல முடியாமலும், பெற்றோரிடம் சொல்ல பயந்து கொண்டும் மாணவி தவித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவியை விடாது துரத்திய ஆசிரியர் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் பலமுறை மாணவியை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாடம் குறித்த சந்தேகம் கேட்க ஆசிரியர் வீட்டிற்கு செல்வதாக மாணவியும் கூறியதால் பெற்றோர் சந்தேகப்படவில்லை.

மகள் மீது சந்தேகம்
ஆனால் மற்ற மாணவிகளை விட தன்னுடைய மகள் மட்டும் அடிக்கடி ஆசிரியர் வீட்டிற்கு செல்வது ஏன் என பெற்றோர் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தனர். பின்னர் திரும்ப திரும்ப விசாரிக்க மாணவி பெற்றோரிடம் உண்மையை ஒத்துக்கொண்டார். தன்னை ஆசிரியர் திருமணம் செய்ய விரும்புவதாகவும், அதனால் அடிக்கடி தன்னை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
இதையடுத்து ஆங்கில ஆசிரியர் நாட்ராயன் மீது பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மாணவியிடம் தீவிர விசாரணை செய்த போலீசார் நாட்ராயன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் நாட்ராயன் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications