கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
தென்காசி: நாளுக்கு நாள் கால்நடைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அதிகரித்தவாறே உள்ளன.. ஆடு, மாடு, கோழி என இந்த கால்நடைகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் விவசாயிகள், இதனால் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். என்ன நடக்கிறது தமிழகத்தில்?
நேற்றுகூட, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கொடிய சம்பவம் ஒன்று நடந்தது.. காக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி தன்னுடைய வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

மேய்ச்சல்: சம்பவத்தன்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்ற நிலையில், ஒரு மாடு மட்டும் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சுதாகர் அவரது மாட்டை தேடி சென்றார்.. அப்போது அவரது பசு மாடு, குடல் சரிந்த நிலையில் இருந்ததை பார்த்து கதறி துடித்தார்.. யாரோ மர்ம நபர் அந்த மாட்டின் வயிற்றில் குத்தியிருக்கிறார்கள். இதனால், குடல் வெளியில் வந்திருப்பதாக தெரிகிறது.
உடனடியாக பசுமாட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை தந்தார்.. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பசு மாடு இறந்துவிட்டது. இதனால், மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸிலும், விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார். பசுமாட்டை கட்டிப்பிடித்து கொண்டு சுதாகர் அழுதது காண்போரை கலங்கடித்தது.
விழுப்புரம்: இதோ, தென்காசி மாவட்டத்தில் இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. சங்கரன்கோவிலை அடுத்துள்ளது கரிவலம்வந்த நல்லூர் என்ற பகுதி.. இங்குள்ள ஒப்பனையாள்புரம் காலனியில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார்.. இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. அப்போது அங்குள்ள வயல் வரப்பில் கொய்யாப்பழங்கள் சிதறி கிடந்தன.
அந்த கொய்யாப்பழங்களை பார்த்ததுமே 2 ஆடுகள் சாப்பிடுவதற்காக அதன் அருகில் சென்றன.. கொய்யப்பழத்தை வாயில் வைத்து கடித்ததுமே டமார் என வெடிகுண்டு வெடித்தது.. அந்த கொய்யாப்பழம் வெடித்து சிதறியதில், 2 ஆடுகளும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்துவிட்டன.
முருகன்: வெடி சத்தம் கேட்டு பதறிப்போன பதறிப்போன முருகன் ஓடிச்சென்று ஆடுகளை பார்த்தார்.. 2 ஆடுகளையுமே முருகனால் காப்பாற்ற முடியவில்லை. கொய்யாப்பழத்தில் வெடி மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியாமல், ஆடுகள் அதை கடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து முருகன் கரிவலம்வந்த நல்லூர் போலீசில் புகார் அளித்தார்..
போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து, ஆய்வுகளை மேற்கொண்டனர். வனவிலங்குகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் அவை வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.
விசாரணை: எனவே, அந்த பகுதியிலிருக்கும் தோட்டங்களில் வேறு இடங்களில் ஏதேனும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்று தோட்ட உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications