தென்காசி விஏஓ பத்மாவதியும் இப்படித்தான்.. இப்ப நகராட்சி அரசு ஊழியர்.. போயும் போயும் இந்த நேரத்திலா?
தென்காசி: தென்காசி அரசு ஊழியர் ஒருவர் கைதாகி இருப்பது, அரசுத்துறையில் மீண்டும் ஒரு அதிர்வலையை உண்டாக்கி வருகிறது.. தென்காசி நகராட்சியில், அதுவும் டெண்டர் வைப்புத் தொகையிலேயே இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது, பலரது கவனத்தை திருப்பி வருகிறது. இது தொடர்பான விசாரணையும் தீவிரமாக கொண்டிருக்கிறது .
தமிழகத்தின் அரசு துறைகளில் லஞ்ச லாவண்யங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் அப்பட்டமாக அசிங்கப்பட்டு, கைதாகி வருகிறார்கள். இதில், பெண் அதிகாரிகளும் கைதாவது கவலையை தந்து கொண்டிருக்கிறது.

இதற்கு தென்காசி மாவட்டமும் விதிவிலக்கல்ல.. வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல் என்பவர், ராஜகோபாலகேரி கிராமத்தில், தன்னுடைய அப்பாவின் பெயரில் உள்ள சொத்தை தனது பெயரில் பட்டா மாறுதல் செய்ய கிராம விஏஓ பத்மாவதியை சமீபத்தில் அணுகினார்.
பட்டா மாறுதல் லஞ்சம்
அதற்கு அவர், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி சொல்லவும், அதன்படியே விண்ணப்பித்துவிட்டு, மறுபடியும் விஏஓ பத்மாவதியை குமாரவேல் தொடர்பு கொண்டார். அப்போது, பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் என பத்மாவதி சொன்னாராம். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று குமாரவேல் சொல்லவும், வெறும் ரூ.4,500 தந்தால் போதும், அபபோதுதான் உங்கள் பட்டாவை பெயர் மாற்றம் செய்ய முடியும் என்று பத்மாவதி கறாராக கூறியிருக்கிறார்.
ஆனால், சொந்த நிலத்துக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத குமாரவேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தந்துவிட்டார்.. அவர்கள் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை குமாரவேல் கொடுத்துள்ளார்.. அதனை வாங்கிய பத்மாவதியை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்திருந்தனர்..
மீண்டும் தென்காசிக்கு அதிர்ச்சி
பெண் விஏஓ தென்காசியில் வசமாக சிக்கியிருப்பது, அரசுத்துறை அதிகாரிகளிடையே மீண்டும் அதிர்வலையை உண்டுபண்ணிய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது.
அதாவது, தென்காசி நகராட்சியில் டெண்டர் வைப்புத் தொகையை கையாடல் செய்த இளநிலை உதவியாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளராக பணியாற்றுபவர் ராஜா முகமது.
கடைசி நேரத்தில் இப்படியா ஆகணும்
கடந்த 2023 மார்ச் முதல் 2024 மார்ச் 31 வரை உள்ளாட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தணிக்கையில் டெண்டர் வைப்புத்தொகையில் ராஜாமுகமது ரூ.21 லட்சத்து 48 ஆயிரத்து 890 ரூபாய் கையாடல் செய்தது தற்போது அம்பலமாகியிருக்கிறது.. பணத்தை கையாடல் செய்த அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்...
ராஜா முகமது இந்த மாத இறுதியில், அதாவது இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெற இருந்தாராம். அதற்குள் இப்படியொரு அசிங்கத்தில் சிக்கி கொண்டுள்ளார். நாளுக்கு நாள் அரசுத்துறையில் இதுபோன்ற கையாடல்களும், கைதுகளும் நடப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications