For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைப்பூசம்: ஆழ்வார்குறிச்சி சிவசைலபதி பரமகல்யாணி ஆலயத்தில் தெப்பத்திருவிழா

ஆழ்வார்குறிச்சியில் சிவசைலபதி பரமகல்யாணி அம்பாளுக்கு 24ம் ஆண்டு தைப்பூச தெப்ப உற்சவம் நடந்தது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சிவசைலபதி பரமகல்யாணி அம்பாளுக்கு 24ம் ஆண்டு தைப்பூச தெப்ப உற்சவம் நடந்தது.

சிவசைலத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் உள்ளது. இங்குள்ள சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆழ்வார்குறிச்சியில் தைப்பூச திருநாளன்று தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டு சிவசைலத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சி திருக்குளம் விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினர்.

தொடர்ந்து நேற்று காலை தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு சுவாமி அம்பாள் எழுந்தருளினர். அங்கு பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தைப்பூச நாளன்று சந்திர கிரஹணம் ஏற்படுவதால் அதன் முதல் நாளே தெப்ப உற்சவம் நடைபெற்றது.

தைப்பூச தெப்பத்திருவிழா

தைப்பூச தெப்பத்திருவிழா

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் தைபூச தெப்பத்திருவிழா நடைபெற்றது 10 நாட்கள் திருவிழாவில் தினமும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் , வீதி உலா, மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப திருவிழா நடைபெற்றது.

பக்தர்கள் பங்கேற்பு

பக்தர்கள் பங்கேற்பு

தெப்பத்தை 11 முறை வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராமானோர் கலந்து கொண்டனர்
ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டியார் செய்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த இறைவன், இறைவியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி

தீர்த்தவாரி

ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், சிவசைலம், கடையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதையடுத்து இன்று ரிஷப வாகனத்தில் சிவசைலம் திருக்கோயிலுக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.

அலங்கார தெப்ப உற்சவம்

அலங்கார தெப்ப உற்சவம்

வாணவேடிக்கையுடன் திருக்குளம் வீதிஉலா வந்து பெரியதளவாய் மாடசுவாமிக்கு காட்சியளித்தல் நடக்கிறது. 31ம்தேதி அதிகாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா, அதனை தொடர்ந்து தர்மபுரம் ஆதீனமடத்தில் 2 சிவாச்சாரியார்கள் வைதீக கோலத்துடன் ரெட்டை சோடசோப தீபாராதனை நடைபெற்றது.

அபிஷேகம் தீபாராதனை

அபிஷேகம் தீபாராதனை

இதனைத் தொடர்ந்து ருத்ர ஹோமம், ருத்ர ஏகாதசி, அபிஷேகம், தீபாராதனை, இரவு 9 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளினார். கோயில் சென்றதும் பின்னர் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

English summary
Thaipusam is a Hindu festival celebrated mostly by the Tamil community. Tirunelvely district Alwarkuruchi sivasailapathi paramakalyani ambal temple theppam festival on Thai Poosam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X