For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்த அரசின் முடிவு தைரியமானது - தந்தி டிவி கருத்துக்கணிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்த மத்திய அரசின் முடிவு தைரியமானது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

thanthi tv opinion poll about Demonetisation

இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றினர். ஆனால் வங்கியில் போதிய அளவு புதிய நோட்டுகள் இல்லாததால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்த மத்திய அரசின் முடிவு பற்றி தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற பெயரில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் இன்று வெளியாகின. ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்த அரசின் முடிவு தைரியமானது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைரியமானது - 85%

வாக்கு வங்கி அரசியல் - 11%

கருத்து இல்லை - 4%

English summary
Demonetisation: The courageous decision of the Central Government, says thanthi tv opinion poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X